குஜராத் மாநில அமைச்சர்கள் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் இன்று அயோத்தியில் உள்ள பகவான் ஸ்ரீ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் குழந்தை ராமரை தரிசிக்க இன்று அயோத்திக்கு சென்றார். அவருடன் குஜராத் மாநில அமைச்சர்ககளும் சென்ற ராமரை தரிசித்தனர்.
பின்னர் அனைவரும் ஒன்றாக நின்று ஜெய் ஸ்ரீ ராம் என்ற பக்தி கோஷத்தை எழுப்பி தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர். மேலும் இன்று வார இறுதி நாள் என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.