லக்னோ அணி தங்கள் அணிக்கு புதிய துணை பயிற்சியாளரை தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல் ரவுண்டர் லான்ஸ் க்ளூசனரை நிர்ணயித்துள்ளது
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. மேலும் இதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கினர்.
இந்நிலையில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது லக்னோ அணி தங்கள் அணிக்கு புதிய துணை பயிற்சியாளரை நிர்ணயித்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல் ரவுண்டர் லான்ஸ் க்ளூசனரை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
𝘿𝙪𝙧𝙗𝙖𝙣 𝙨𝙚 𝙖𝙖𝙮𝙖 𝙝𝙪𝙢𝙖𝙧𝙖 𝙙𝙤𝙨𝙩 💙🔥
Lance Klusener joins our coaching staff for the season 🤩 pic.twitter.com/0GWVNFEEnV
— Lucknow Super Giants (@LucknowIPL) March 1, 2024
இவர் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உடன் இணைந்து செயல்பட உள்ளார். இவரது வருகை லக்னோ அணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
லான்ஸ் க்ளூசனர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்.ஏ.20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
மேலும் ஐ.பி.எல். தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளின் பயிற்சியாளர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.