நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் வணிக விண்கலம் தற்போது, பூமியுடனான அதன் தொடர்பை இழந்தது.
உலகின் பல்வேறு நாடுகளும் நிலவு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அதன்படி முதன்முதலாக நிலவு குறித்து ஆய்வு செய்ய அப்பல்லோ என்ற விண்கலத்தை அமெரிக்கா அனுப்பி சாதனை படைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து, நிலவு குறித்து ஆய்வு செய்ய ரஷ்யா தனது விண்கலத்தை அனுப்பியது. பின்னர், சீனாவும், இந்தியாவும் விண்கலத்தை அனுப்பின.
இந்த நிலையில், கடந்த வாரம், அமெரிக்காவின் ஹூஸ்டனை தளமாக கொண்டு செயல்படும் இன்டுயடிவ் மெஷின்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒடிசியஸ் என்ற முதல் வணிக விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
தொடர்ந்து, நிலவின் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அந்த விண்கலம் தற்போது பூமியுடனான அதன் தொடர்பை இழந்தது. விண்கலத்தை மீண்டும் தொடர்பு கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
















