இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,000 ஆக உள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி, 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 1,000 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 153 பேர் மீண்டுள்ளனர். தற்போது வரை 4 கோடியே 44 இலட்சத்து 95 ஆயிரத்து 360 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தற்போது வரை, 220 கோடியே 68 லட்சத்து 6 ஆயிரத்து 267 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.