இந்தியாவில் நடைபெறுவரும் ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதல் நாள் முடிவில் தமிழக அணி 101 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இன்று இரண்டு அரையிறுதி போட்டிகள் நடைபெறுகிறது. அதில் தமிழ் நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்தது.
தமிழக வீரர்கள், மும்பை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். தமிழக அணி வீரர்கள் சாய் சுதர்சன் 0, ஜெகதீசன் 4 , ரஞ்சன் பால் 8 , இந்திரஜித் 11 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
100 ரன்களையாவது தொடுமா என்ற நிலையில் இருந்த தமிழக அணியை விஜய் சங்கர் – வாஷிங்டன் சுந்தர் இணை கொஞ்சம் மீட்டெடுத்தனர். விஜய் சங்கர் 44 ரன்களிலும், சுந்தர் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார். முஷீர் கான், ஷரதுல் தாகூர், தனுஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். மோஹித் 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து மும்பை அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் பூபன் லால்வானி 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் முஷீர் கான் 24 ரன்களும், மோஹித் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். தமிழக அணியில் குலதீப் சென் மற்றும் சாய்கிஷோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தற்போது மும்பை அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்களை எடுத்துள்ளது.