அய்யா வைகுண்டரின் 192-ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், இன்று, அய்யா வைகுண்டரின் 192 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் பக்தர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகத்தில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள். அன்பு, அறிவு, பொய்யாமை, சமதர்மம், ஆன்மீகம் ஆகியவற்றை ஒழுக்க நெறியாகப் போதித்தவர்.
நமது பாரதப் பிரதமரின் ‘வாசுதேவ குடும்பம்’ என்ற நோக்கம், அய்யா வைகுண்டர் அவர்களின் ‘உலகம் ஒரு குடையின் கீழ் இயங்க வேண்டும்’ என்ற உயரிய எண்ணத்தின் செயல்பாடுதான்.
அய்யா வைகுண்டர் வழி நடப்போம். ஏற்றத் தாழ்வு இல்லாத, சமுதாயம் உருவாக ஒன்றிணைந்து உழைப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.