கூகிள் ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் அனுமதித்துள்ளது கூகிள்.
இணையதள தேடல் இயந்திரத்தில் (search engines), உலகின் முன்னணியானது அமெரிக்காவை மையமாக கொண்ட கூகுள் நிறுவனம் . உலகெங்கும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் பயனர்கள் தங்கள் ஸ்மார்போன்களில் பயன்படுத்தும் வகையில் செயலிகளை கூகுள் தேடல் இயந்திரத்தின் பதிவிறக்க தளமான “ப்ளே ஸ்டோர்” எனும் தளத்தில் கட்டமைத்து இருந்தன.
ப்ளே ஸ்டோர் ஆப்பிலிருந்து பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக அந்த நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண சேவையாக கூகுள் 11 சதவீதத்திலிருந்து 26 சதவீதம் வரை வசூலித்து வந்தது.
1 சதவீதம் முதல் 26 சதவீதம் வரையிலான சேவைக் கட்டணங்களை ஆப்-இன்-ஆப் பேமெண்ட்களில் கூகுள் விதித்ததற்கு இந்திய ஸ்டார்ட்அப்களின் எதிர்ப்பை தொடர்ந்து. இந்தக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய நம்பிக்கையற்ற அதிகாரிகளிடமிருந்து முந்தைய உத்தரவுகள் இருந்தபோதிலும், இணக்கத்தின் அடிப்படையில் பயன்பாடுகளைப் பராமரிக்க அல்லது அகற்ற Google நீதிமன்ற அனுமதியைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று, கூகுள் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கட்டணம் செலுத்தாத சில இந்திய செயலிகளை கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.
அதில் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில், இந்தியாவின் பிரபலமான வேலை தேடுவோருக்கான செயலியான “நவுக்ரி.காம்” (naukri.com), ரியல் எஸ்டேட் சேவைக்கான செயலியான “நைன்டிநைன் ஏக்கர்ஸ்.காம்” (99acres.com), “பாரத்மேட்ரிமோனி.காம்” (bharatmatrimony.com) மற்றும் “ஷாதி.காம்” (shaadi.com) உள்ளிட்டவை அடங்கும்.
இதுகுறித்து ‘பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல் ஜானகிராமன், இது இந்திய இணைய சேவைக்கு ஒரு கருப்பு தினம்” என கூறினார்.
“இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு என பிரத்யேகமான ஒரு “ஆப் ஸ்டோர்” (app store) தேவை” என நவுக்ரி.காம் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தானி தெரிவித்தார்.
இந்நிறுவனங்கள் கூகுளுக்கு கட்டண பாக்கியை செலுத்தும் வரை, இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் நீடிக்கும் என தெரிகிறது.
இந்தியாவின் பொருளாதாரத்திற்கு உதவும் வைகையில் உள்ள தொழில்நுட்ப செயலிகளை நீங்கியது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதை தீர்மானம் செய்ய எந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் அனுமதி இல்லை எனவும் , இந்த அறிவிப்பை எதிர்த்து இந்தியா கட்டணம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, “இந்தியா மிகவும் தெளிவாக உள்ளது, எங்கள் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது… எங்கள் ஸ்டார்ட்அப்கள் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை பெறும்.”
பட்டியலிடப்பட்ட கூகுள் அதிகாரிகள் மற்றும் ஆப் டெவலப்பர்களை அடுத்த வாரம் சந்திப்பதாக வைஷ்ணவ் கூறியிருந்தார்.
“நான் ஏற்கனவே கூகுளுக்கு போன் செய்துள்ளேன்… பட்டியலிடப்பட்ட ஆப் டெவலப்பர்களை நான் ஏற்கனவே அழைத்துள்ளேன், அடுத்த வாரம் அவர்களை சந்திப்போம். இதை அனுமதிக்க முடியாது. இந்த வகையான அறிவிப்பை அனுமதிக்க முடியாது,” என்று வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
இந்தியா ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்அப்களைக் கொண்ட ஒரு வலுவான ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கியுள்ளது என்றும், ஒரு தசாப்தத்தில் புதிதாக 100 யூனிகார்ன்களை உருவாக்கியுள்ளது என்றும், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆற்றல் முழுவதுமாக மாற்றப்பட வேண்டும் என்றும், “எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் இதை தீர்மானிக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை அடிப்படையில் நீக்கப்பட்ட செயலிகள் அனைத்தையும் கூகிள் நிறுவனம் மீண்டும் இணைத்துள்ளது.