2024 மக்களவை தேர்தல் : பாஜக-வின் முதல் வேட்பாளர் பட்டியல்!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 மக்களவை தேர்தல் : பாஜக-வின் முதல் வேட்பாளர் பட்டியல்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 12:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுகிறார்.

2024 மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது . டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் 34 மத்திய அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 28 பெண்களும், 27 பட்டியலினத்தவர்களும், 10 பழங்குடியினர்களும், 57 ஓபிசி பிரிவினரும் இடம் பெற்றுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவதாக வினோத் தாவ்டே தெரிவித்துள்ளார்.

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், தற்போதைய மக்களவை தலைவர் ஓம்பிர்லா ராஜஸ்தானின் கோட்டாவிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரிண் ரிஜிஜு அருணாச்சலப் பிரதேசம் மேற்கு தொகுதியிலும், கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரிலும், கிஷண் ரெட்டி செகந்திராபாத்திலும், ராஜீவ் சந்திர சேகர் திருவனந்தபுரத்திலும், முரளிதரன் ஆட்டிங்காலிலும் போட்டியிடுகின்றனர்.

விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா குணாவிலும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரிலும், சர்பானந்த சோனாவால் லக்கிம்பூரிலும், பூபேந்திர யாதவ் ஆல்வார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மலையாள நடிகரும் பாஜக நிர்வாகியுமான சுரேஷ் கோபி திரிச்சூரில் களமிறங்குகிறார். இதேபோல் பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஹேமாமாலினி உத்தரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியில் 3-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் விதிஷா தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி ஸ்வராஜ் டெல்லியிலும் போட்டியிடுகின்றனர். நடிகர் மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

நடிகை லாக்கெட் சாட்டர்ஜி ஹூக்ளி தொகுதியிலும், நடிகர் ரவி கிஷன் கோரக்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Tags: bjp
Share
Tweet
SendShare
Previous Post

நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் அனுமதித்த கூகிள்!

Next Post

குண்டு வெடிப்பு நடந்த ராமேஸ்வரம் ஹோட்டலில் பெங்களூரூ போலீஸ் விசாரணை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies