நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஈரோடு நாடாளுமன்ற குழு ஆய்வு கூட்டம் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர் வேதானந்தம் அவர்கள், நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற மையக் குழு, பிற அணி நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடி, தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.