கோவையை சேர்ந்த பாஜக நிர்வாகி மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கோவை கவுண்டன்பாளையம், கொண்டையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன், பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு நாள் மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
கோவை கவுண்டன்பாளையம், கொண்டையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு.நித்தியானந்தன் அவர்கள், பல்லடத்தில் நடைபெற்ற #EnMannEnMakkal நிறைவு நாள் மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற… pic.twitter.com/xCkbf67zww
— K.Annamalai (@annamalai_k) March 3, 2024
இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம். நித்தியானந்தன் போன்ற தன்னலமற்ற தொண்டர்களின் உழைப்பு என்றும் போற்றுதலுக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.