தமிழ்நாட்டில், திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும் அவற்றின் தலைநகரங்களின் பெயரைக் கொண்டே அமைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், நிர்வாக வசதிக்காவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் தாலுக்காகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து, திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும் திருவோணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பல புதிய தாலுகாக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.