திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் அரசு பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன். இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவருக்கு சொந்தமாகத் தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்ற பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து துறையூர் முதல் பெரம்பலூர் இயங்கி வருகிறது.
இந்த பேருந்தில் விநியேகப்படும் டிக்கெட்டில் ஒரு பக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் என்று உள்ளது. மறுபக்கம் தனலட்சுமி சீனிவாசன் ட்ரான்ஸ்போர்ட் என்றும் அந்த டிக்கெட்டில் நாள் பயணத் தேதி உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது.
டிக்கட்டை வாங்கிப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் நடத்துனரிடம் கேட்டபோது அனைவருக்குமே இதே போல் தான் டிக்கெட் விநியோகித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.