முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த விழாவில் பல பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் கலந்துகொண்டனர்.
அதேபோல் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு, ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று முதல் நாள் கொண்டாட்டம் உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது. இதுவரையில்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவு வகைகள், உச்ச நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.
நேற்று நடந்த கொண்டாட்டத்தில் சர்வதேச புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானாவின் கலைநிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. அவருடன் ஷாரூக்கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்டோரும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஷாரூக்கான் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.
முதல் நாள் கொண்டாட்டத்தின்போது முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் பாடல் ஒன்றுக்கு நடனமாடினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
குறிப்பாக முகேஷ் மற்றும் நீடா அம்பானியின் உடைகள் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.