கோவையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி குறித்து முடிவு செய்ய தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு நிர்வாகிகள் முழு அதிகாரம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெஸ்ட் ராமசாமி, குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை நாடு இப்போது செழிப்பாக இருக்கின்றது என்றும், பிரதமர் மோடி மீண்டும் வந்தால் பொது மக்களுக்கானவற்றை செய்து கொடுப்பேன் என உறுதி கொடுத்துள்ளா்.
இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் உயர்த்தியுள்ளார். புயல் வந்த போது கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்ய மறுத்தது. ஆனால், மோடிதான் இந்தியாவை காப்பாற்றியுள்ளார்.
கூட்டணி தொடர்பாக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேசி வருகிறோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே, பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க கூட்டணி பெறும். வரும் தேர்தலில் பிரதமராக மோடியை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நாடு நலம் பெறும் என்றார்.