திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள உள்ள பாரதியார் மண்டபத்தில், இன்று அய்யா வைகுண்டரின் 192-வது அவதாரத் தின விழா மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறுப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, நூலினை வெளியிட்டு உரையாற்றினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது,
“கடவுள் நாராயணன் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு, காலத்திற்கேற்ப பல அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில், அய்யா வைகுண்டர் நாராயணரின் அவதாரமாகத் திகழ்கிறார். சனாதன தர்மத்திற்கு பாதிப்பு வரும் போது, கடவுள் நாராயணர் பல அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமே அய்யா வைகுண்டர்.
ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் மெட்ராஸ் மாகாணத்தில் மக்களைக் கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்தனர். இது வரலாறு.
எனக்கு இயேசுவைப் பிடிக்கும், பைபிள் பிடிக்கும் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.