‘Viksit Bharat 2047’ தொலைநோக்கு ஆவணம் மற்றும் புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் நிகழ்ச்சி நிரல் குறித்து பிரதமர் மோடி தலைமயிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமயிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வளர்ச்சியடைந்த பாரதம்-2047, மே மாதம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகளுக்கான 100 நாள் நிகழ்ச்சி நிரலை விரைவாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வளர்ச்சியை அதிகரிக்கவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரின் நலனை உறுதி செய்யவும் தனது அரசு எடுத்துள்ள பல நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, தேர்தலின் போது மக்களின் ஆதரவைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தனது அமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடியின் Viksit Bharat2047 தொலைநோக்கு என்ன?
1) கடந்த சில ஆண்டுகளாக, பிரதமர் மோடியின் உரைகளில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்கு முதன்மை மையமாக உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் தனது அரசின் செயல் திட்டத்தை பிரதமர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
2) இந்த பார்வையானது பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. “நான் எதைச் செய்தாலும் வளர்ந்த இந்தியாவுக்காக இருக்க வேண்டும்” என்று உறுதிமொழி எடுக்குமாறு பிரதமர் மோடி முன்பு நாட்டு மக்களிடம் கூறினார்.
3. “விக்சித் பாரத்” திட்ட வரைபடம், தேசிய பார்வை, எண்ணங்கள், இலக்குகள் மற்றும் செயல் புள்ளிகளுடன் ஒரு விரிவான வரைபடத்தைக் கொண்டுள்ளது, அதன் இலக்குகளில் பொருளாதார வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs), எளிதாக வாழ்வது, எளிதாக வணிகம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன்.
4) புதிய அரசாங்கத்திற்கான “செயல்படுத்தக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டங்களை” கொண்டு வருமாறு பிரதமர் தனது அமைச்சரவை சகாக்களிடம் முன்பு கேட்டுக் கொண்டார்.
5) தனது அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று அவர் பலமுறை நம்பிக்கை தெரிவித்தார், மேலும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 370 இடங்களையும், தனது கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 400 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளது.
விக்சித் பாரத்க்கான திட்டம் 2 ஆண்டுகளுக்கும் மேலான தீவிர தயாரிப்பின் விளைவாகும். இது அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள், கல்வியாளர்கள், தொழில் அமைப்புகள், சிவில் சமூகம், அறிவியல் அமைப்புகள் மற்றும் அவர்களின் யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பெற இளைஞர்களை அணிதிரட்டல் போன்ற பரந்த அளவிலான ஆலோசனைகளை உள்ளடக்கிய ஒரு முழு அரசாங்க அணுகுமுறையையும் உள்ளடக்கியது. 2700க்கும் மேற்பட்ட கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டன. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.