காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதலில், 90 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.
இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதலில், 90 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தற்போது வரை, சுமார் 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 71 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.