பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? : பிரதமர் மோடி
Jul 30, 2026, 10:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 4, 2024, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 மெகாவாட் (யூனிட்-2) தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தையும், ஜார்கண்டின் சத்ராவில் வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (யூனிட்-2) திட்டம் உள்ளிட்ட ரு.56,000 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இன்று, அனைவரும் இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தைப் பற்றி பேசுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் அரசாங்கம் தெலுங்கானாவில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் என தெரிவித்தார்.

தெலுங்கானா உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. மக்களின்  அபிலாஷைகளை நிறைவேற்ற மத்திய அரசு தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களுக்குப் பிறகும், தெலுங்கானா மக்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. 2014 க்குப் பிறகு, மத்தியில் ஆளும் பாஜக அரசு தெலுங்கானா வளர்ச்சிக்கும், பழங்குடியின மக்களின் கவுரவத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக தெரிவித்தார்.

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய பிரதமர், பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் தேசிய விழாவாக கொண்டாடப்படுமா? என்றும் வினவினார்.பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக பாஜக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசியின் இரண்டாவது யூனிட்டை திறந்து வைத்துள்ளோம். இது மேலும் விரிவுபடுத்தப்படும். இது தெலுங்கானாவின் எரிசக்தி உற்பத்தி திறன் மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

தேசிய நெடுஞ்சாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைப்பு தெலுங்கானாவின் வளர்ச்சியின் வேகத்தை மேலும் அதிகரிக்கும்.  இது பயணத்துக்கான நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை மேம்படுத்தும். இதன் மூலம் பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிதாக மின்மயமாக்கப்பட்ட அம்பாரி – அடிலாபாத் – பிம்பால்குடி ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். NH-353B மற்றும் NH-163 மூலம் தெலுங்கானாவை மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கருடன் இணைக்கும் இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: PM ModiPMmodi speechPresidenttelegana
ShareTweetSendShare
Previous Post

உச்சநீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு! – பிரதமர் மோடி பாராட்டு!

Next Post

காஸாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் : 90 பேர் பலி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies