சண்டிகர் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து வெற்றி பெற்றார்.
சண்டிகர் மாநகராட்சி துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. பதிவான 36 வாக்குகளில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகளையும், ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குர்பிரீத் சிங் 16 வாக்குகளையும் பெற்றனர். ஓரு ஓட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் மூத்த துணை மேயர் தேர்தலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பாஜனதாவுக்கு 17 கவுன்சிலர்கள் இருந்தனர். கடந்த 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு தாவினர். இதனால் தற்போது ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினர்களும், காங்கிரஸ்க்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளனர். ஷிரோமணி அகாளி தளத்திற்கு ஒரு கவுன்சிலர் உள்ளனர்.