ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.
அவருடைய போதனைகளும், ஆன்மிக வழிகாட்டுதலும் பலருக்கு சிறந்த வழிகாட்டாக அமைந்துள்ளது, நமது சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு மிகைப்படுத்த முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.