கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கவும், நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார்.
பின்னர், கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, பாரதிய நபிகியாவித்யுத் நிகம் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலையின் ‘கோர் லோடிங்’ பணியை பார்வையிட்டார். அப்போது அதன் செயல்பாடுகளை பிரதமர் மோடிக்கு அதகாரிகள் விளக்கினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர்,பின்னர் கார் மூலம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க சென்றார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.