பெங்களூரூ ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக பெங்களூரூ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் மைடகுரு கடப்பாவில் அப்துல் சலீம் என்பவனை சந்தேகத்தின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இவன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நபர் என கூறப்படுகிறது. அவனிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.