நாடு முழுவதும் உள்ள இந்திய புவியியல் ஆய்வகத்தின் அலுவலகங்களில் 174-வது நிறுவன தின விழா நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள மத்திய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிறுவன தினவிழா கொண்டாட்டத்தை இந்திய புவியியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநர் ஜனார்த்தன் பிரசாத் தொடங்கி வைத்தார்.
இந்த கொண்டாட்டத்தின் போது இந்திய புவியியல் ஆய்வகத்தை நிறுவிய டாக்டர் தாமஸ் ஓல்ட்ஹாம், முதலாவது இந்திய தலைவர் டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதை படிவங்கள், கனிமங்கள், பாறைகள் ஆகியவற்றை கொண்ட கண்காட்சியும் நடைபெற்றது. கொல்கத்தா மற்றும் அதன் புறநகரில் உள்ள கல்லூரிகளின் மாணவர்கள் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டனர்.