சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.85 அதிகரித்து, ரூ.6 ஆயிரத்து 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.93 உயர்ந்து, ரூ.6 ஆயிரத்து 562-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து, ரூ.78.20-க்கும், ஒரு கிலோ ரூ.78 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.680 உயர்ந்த சம்பவம் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.