டீ விற்பவரிடம் பிறந்த வருடத்தை கேட்டு, அதன் அடிப்படையில் G-pay மூலம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பணத்தை வழங்கினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு இருசக்கர வாகனத்தில் டீ விற்றவரிடம் டீ வாங்கி அருந்தி, அவர் வைத்திருந்த G-pay, Pay Tm, உள்ளிட்டவற்றை பார்த்து, டீ விற்பவரிடம் பிறந்த வருடத்தை கேட்டு, அதன் அடிப்படையில் 1978 ரூபாயை G-pay மூலம் அண்ணாமலை செலுத்தினார். இதனை கண்ட பாஜக தொண்டர்கள் கைத்தட்டி தங்கள் மகிச்சியை வெளிப்படுத்தினார்கள். இதனால் அந்த டீ விற்கும் நபர் அதிர்ச்சியில் உறைந்தார்.
After the large public meeting of our Hon PM Thiru @narendramodi avl in Chennai yesterday, we had the opportunity to meet a Tea seller anna who had come to our meeting.
Thankful for his kindness & a hot cup of Tea! pic.twitter.com/9lGUgHXcg6
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 5, 2024