மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கப் பட்டது .
மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி ரூ.1264 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டினார்.
870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், அவர்களுக்கான தங்கு விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம, மாணவர்கள் தங்கும் விடுதிகள், இயக்குநருக்கான தங்கு இல்லம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டது.
மொத்த தொகையில் 82 சதவீதம் ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும் மீதி 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள்,இன்று வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை 2026ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.