பாரத பிரதமர் மோடி பாராட்டு :பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகும் ஆர்ட்டிகிள் 370!
Sep 10, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடி பாராட்டு :பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகும் ஆர்ட்டிகிள் 370!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்ட்டிகிள் 370 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை குறித்து மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கெளதம், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தான் ஆர்ட்டிகிள் 370.

இப்படத்தை யாமி கெளதமின் கணவர் ஆதித்யா தார் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் தார் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஹிந்தி மொழியில் தயாராகிய இந்த திரைப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நாடுமுழுவதும் 1500 திரையரங்குகளில் 2200 திரைகளில் திரையிடப்பட்டது.

இந்த படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே இப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் தற்போதும் கூட இப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது.

அதற்கு ஒரு வகையில் பாரத பிரதமர் மோடி காரணமாக உள்ளார். அதாவது ஒரு நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இப்படம் குறித்து பாராட்டி பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், ” 370 வது சட்ட பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ந்து வருகிறது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து ஆர்ட்டிகிள் 370 என்னும் திரைப்படம் வெளிவரவுள்ளதாக கேள்விப்பட்டேன்.

அந்த படம் எப்படி இருக்கும் என தெரியாது ஆனால் காஷ்மீர் பற்றிய உண்மைகள் நாட்டுமக்கள் அனைவர்க்கும் தெரியவரும் ” என கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யாமி கவுதம் நடித்த 370வது சட்டப்பிரிவை மீண்டும் பாராட்டினார்.

இதுகுறித்து பேசிய அவர், ” ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை திரும்பப் பெறுவதாக நாங்கள் உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியது” என கூறினார்.

மேலும் அவர், “ஆர்ட்டிகிள் 370 படம் பிரபலமடைந்து வருகிறது. மக்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் ஆர்வம் காட்டுவது இதுவே முதல் முறை, இது போன்ற திரைப்படங்களுக்கு நன்றி. அயோத்தியில் பிரமாண்ட கோவிலில் ராமரை வரவேற்பதாகவும் உறுதியளித்தோம். இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது” கூறினார்.

இப்படம் வெளியாகிய முதல் நாளில் ரூ. 5.75 கோடி வசூலை குவித்தது . அரசியல் ரீதியான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது.

Tags: PM ModiArticle 370 film
ShareTweetSendShare
Previous Post

அதிபர் தேர்தலையொட்டி அமெரிக்கா கொண்டாடும் ‘Super Tuesday’

Next Post

மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

Related News

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் போராட்டம்!

திண்டுக்கல் : திமுக கவுன்சிலர் மீது நிலம் அபகரிப்பு புகார்!

காத்மாண்டுவில் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீடுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அணஸ்வரா ராஜன்!

சென்னையில் தொழிலதிபர் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies