கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்திய கடலோர காவல்படையின் ‘சமர்த்’ மற்றும் ‘அபினவ்’ ஆகிய கப்பல்கள் புறப்பட்டன.
இந்திய கடலோர காவல்படையின் ‘சமர்த்’ என்ற ஆழ்கடல் ரோந்து கப்பல் மற்றும் அதிவேக ரோந்து கப்பல் ‘அபினவ்’ ஆகிய கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன.
இரு நாடுகளின் கடலோரக் காவல்படையினருக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த விஜயம் காணப்படுகின்றது.
‘சமர்த்’ என்ற ஆழ்கடல் ரோந்து கப்பல் மற்றும் அதிவேக ரோந்து கப்பல் ‘அபினவ்’ ஆகியவை கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலி துறைமுகத்திற்கு சென்றடைந்தது. பின்னர் மார்ச் 02 ஆம் தேதி கொழும்புத் துறைமுகத்தை நோக்கி சென்றது.
இந்த காலி துறைமுகத்தில் இருந்தப் போது கப்பல்கள் இலங்கைக் கடலோர காவல்படைக்கு விபிஎஸ்எஸ், தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாடு, கடல்சார் மாசுப் பதிலளிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளித்தது. மேலும் வேறு சில தொழில்முறை தொடர்புகளையும் நடத்தியது.
மேலும், யோகா, கடற்கரை தூய்மை மற்றும் நடைப்பயிற்சி போன்ற நடவடிக்கைகளும் இந்தப் பயணத்தின் போது நடைபெற்றது.
இதற்கு மேலதிகமாக, காலி மற்றும் கொழும்புக்கு அப்பால் புறப்படும் இலங்கை கடலோர காவல்படை கப்பலுடன் பாதைப் பயிற்சி (PASSEX) நடத்தப்பட்டது.
இந்தப் பயணம் இந்தியாவின் SAGAR கோட்பாடு மற்றும் ‘Neighbourhood First’ கொள்கையுடன் இணைந்தது, மேலும் இது இரு கடற்படைகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் இயங்குநிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.