மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 201 CNG நிலையங்கள் மற்றும் கெயில் இந்தியாவின் சிறிய அளவிலான LNG யூனிட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ ராமேஷ்வர் டெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் ஜெயின் முன்னிலையில் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கெயில் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ சந்தீப் குமார் குப்தா, கூடுதல் செயலாளர் ஸ்ரீ பிரவீன் மல் கானூஜா, கெயில் இயக்குனர் (நிதிப் பிரிவு) ஸ்ரீ ஆர் கே ஜெயின், இயக்குனர் (திட்டங்கள்) ஸ்ரீ தீபக் குப்தா, இயக்குனர் (சந்தைப்படுத்தல்) ஸ்ரீ சஞ்சய் குமார் , இயக்குனர் (வணிக மேம்பாடு) ஸ்ரீ ஆர் கே சிங்கால் மற்றும் CGD நிறுவனங்கள் உட்பட எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் எரிபொருட்களின் விலை மிக அதிகம் என எதிர்க்கட்சிகள் கட்டுக்கதை பரப்பி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியின் காரணமாகவே, எரி பொருட்களின் விலை குறைவாக உள்ளது. குறிப்பாக, உலக நாடுகளில் இந்தியாவில் எரிபொருள் விலை குறைவு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் 2030 -ம் ஆண்டுக்குள் முதன்மை எரிசக்தி பங்களிப்பில், இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்துவதற்கான அரசு முயற்சி செய்து வருகிறது.
தேசிய எரிவாயு கட்டத்தின் வளர்ச்சி மற்றும் நுகர்வு மையங்களை விநியோகத்துடன் இணைக்கும் பரந்த CGD நெட்வொர்க் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவது இன்றியமையாதது என்றார்.