மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 12வது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி :
ஜெமிமா,மெக் லானிங், ஷாபாலி வர்மா,ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி, அஸ்வனி, ராதா யாதவ், மரிசான் கேப், தனியா, ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது.
மும்பை இந்தியன்ஸ் அணி :
யாஸ்திகா, மத்தியூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன் ப்ரீத், பூஜா, அமெலியா, அமன்ஜோத், சஜீவன் சஜனா, ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.