காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற போது, கோவிலில் இருந்த பக்தர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பிரசித்தி பெற்ற மகாகாலேஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்றார். அவ்வப்போது இந்து மதத்திற்கு எதிராக பேசும் ராகுல் காந்தி கோவிலுக்கு வருவதை பார்த்த பக்தர்கள், மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினர்.
மேலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் யாத்திரை இன்று மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் நகரத்தை அடைந்தபோது, அங்கு இருந்த பா.ஜ.க. தொண்டர்களும், மக்களும் ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பினர். பின்னர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டனர்.