இந்தியாவில் தற்போது 71 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கழுத்தில் கத்தி வைத்துள்ளது ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI).
ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலத்திற்கான ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரிக் கோரிக்கைகள் வடிவில் இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையில் வரி மற்றும் அதை செலுத்தாதற்கான வட்டியையும் சேர்த்து செலுத்தாமல் உள்ள 71 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கழுத்தில் கத்தி வைத்துள்ளது ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI).
மேலும் இந்த 71 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நிர்வாகத்தின் புலனாய்வுப் பிரிவான டிஜிஜிஐ மூலம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் வட்டி மற்றும் அபராதம் தவிர்த்து ரூ. 1.12 லட்சம் கோடி வரி மட்டும் உள்ளன. இந்த கோரிக்கை அறிவிப்புகள் ஜிஎஸ்டி சட்டத்தின் நீட்டிக்கப்பட்ட காலப் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டன, 100% வரை அபராதம் விதித்து வட்டியைத் தவிர்த்து ரூ. 2.3 லட்சம் கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளன.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உள்ள ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு வரியோ, வட்டியோ வசூலிக்கப்படவில்லை. ஆனால் அதன்பிறகு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. லாட்டரி, பேட்டிங், காம்பிளிங் போன்ற விளையாட்டு நிறுவனங்கள், பந்தயம் வைத்து பணம் பெறும் விளையாட்டுகள் அனைத்திற்கும் வரி வசூலிப்பது குறித்து பல அமைச்சர்கள் கொண்ட குழு ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் 2021-ம் ஆண்டு மே மாதம் இது குறித்து ஆலோசனை நடத்தியது.
அதன்பிறகு 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களிடம் 28% வரிவசூலிக்கும் பாலிசியை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்து 2023-ம் ஆண்டு 1 அக்டோபர் மாதம் நடைமுறைக்கு கொண்டுவந்தது .
அதன்பிறகு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களில் 28% வரி செலுத்தாமலும் அதற்கான வட்டி, அபராதம் அதிகரிப்பு உள்ளிட்டவைகளை செலுத்தாமல் தற்போது இந்தியாவில் 71 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கழுத்தின் மீது கத்தி வைத்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில். இதுபோன்று முறையாக வரி செலுத்தாமல் இருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.