2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் மும்பை அணிகள் முன்னேறியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் மும்பை அணிகள் முன்னேறியுள்ளது. முன்னதாக மும்பை மற்றும் தமிழகம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 146 ரன்களும், மும்பை அணி 378 ரன்களும் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 162 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பின்னர் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசஷ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 170 ரன்களும், மத்திய பிரதேசம் அணி 252 ரன்களும் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 402 ரன்களும், மத்திய பிரதேஷ் அணி 258 ரன்களும் எடுத்தது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியானது மார்ச் 10 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி 41 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் விதர்பா 2 முறை கோப்பையை வென்றுள்ளது.