சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இதனால், பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் போன்று உயர்பதவியில் இருப்பவர்கள், சனாதனம் குறித்து பேசியிருக்கக்கூடாது என நீதிபதி அனிதா சுமந்த் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அமைச்சர் உதயநிதிக்கு ஏற்கனவே, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.