தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால, ஊழலற்ற, நேர்மையான அரசின் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை கொண்டும், தேச நலனிற்காகவும், ஒருமைப்பாட்டிற்க்காகவும் பிரதமர் முன்னெடுக்கும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட முன்வந்திருக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர், சரத்குமாரை தமிழக பாஜக சார்பாக வரவேற்று மகிழ்கிறோம்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நேரத்தில், தேசியத்தின் மற்றுமொரு குரலான அண்ணன் சரத்குமார் வரவு, தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் உந்துசக்தியாக அமையும் என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு@narendramodi @AmitShah @MenonArvindBJP @Murugan_Mos@annamalai_k @BJP4India @BJP4TamilNadu @HRajaBJP#PMModi @sajeevpbjp pic.twitter.com/QyA9c98pox
— R Sarath Kumar (@realsarathkumar) March 6, 2024