ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பெரு நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து ஆல்பர்டோ ஒடரோலா ராஜினாமா செய்தார்.
பெரு நாட்டின் பிரதமராக இருந்து வந்த ஆல்பர்டோ ஒடரோலா, தனது செல்வாக்கை பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரை சட்டவிரோதமாக, பொதுத்துறை சார்ந்த பணியில் அமர்த்தியதாக, எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஆல்பர்டோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெரு அதிபருடன் பேசிய பிறகே, பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.
அரசியல் எதிரிகளின் அச்சுறுத்தல் என்னை ஒன்றும் செய்யாது என்று கூறினார்.