எம்எச் 60 ஆர் (MH 60R) ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள், இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் ‘சீஹாக்’ ஹெலிகாப்டர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
எம்எச் 60 ஆர் (MH 60R) ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள், இன்று கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா இந்திய கடற்படையின் விமானப்படை தளத்தில் இருந்து கடற்படையில் இணைக்கப்பட்டது.
இது இந்தியாவின் பாதுகாப்பு நவீனமயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய தருணமாகும். சீஹாக் ஹெலிகாப்டர்களின் படைப்பிரிவு இந்திய கடற்படையில் ஐஎன்ஏஎஸ் 334 என இயக்கப்படும்.
சீஹாக் ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படை அதன் கடல்சார் வலிமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘சீஹாக்’ ஹெலிகாப்டர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு விஷயங்களை பற்றி பார்ப்போம்.
‘சீஹாக்’ ஹெலிகாப்டர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை :
1. சீஹாக் ஹெலிகாப்டர்கள், 2020-ல் அமெரிக்க அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட 24 விமானங்கள் சார்ந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வாங்கப்பட்டது.
2. சீஹாக் ஹெலிகாப்டர் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு, மேற்பரப்பு எதிர்ப்பு, தேடல் மற்றும் மீட்பு, மருத்துவ காரணங்களுக்காக அவசர மீட்பு உள்ளிட்ட சிக்கலான பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. கடற்படையின் அறிக்கையின்படி, சீஹாக் ஹெலிகாப்டர் வளிமண்டலத்தில் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
4. சீஹாக் ஹெலிகாப்டர் கடல்சார் வலிமையை கணிசமாக மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. அதேபோல் கடற்படையின் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்துகிறது.
5. இந்தியக் கடற்படையின் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீஹாக் நிறுத்தப்படுவது பாதுகாப்பு படையின் கடல்சார் இருப்பை வலுப்படுத்தி பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும்.
6. சென்சார் மற்றும் ஏவியோனிக்ஸ் தொகுப்பு ஆகிய நவீன அம்சங்கள் சீஹாக்ஸில் உள்ளதால், இந்திய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
7. சீஹாக்ஸின் இயக்கமானது, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் பாதுகாப்பு வளர்ச்சியை உறுதி செய்யும் இந்திய அரசின் தொலைநோக்கு இலக்குடன் தடையின்றி இணைவதாக கடற்படை தெரிவித்துள்ளது.