தர்மசாலாவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் நாளை 5வது போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்திய வீரர்கள் இந்த தொடரில் வெற்றி பெற்றி இருந்தாலும் நாளை தொடங்கவுள்ள போட்டியும் அவர்களுக்கு முக்கியமாதாகும் ஏனெனில் இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
ஆகையால் தர்மசாலா மைதானத்திற்கு சென்ற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்களை பிசிசிஐ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.