டி20 உலகக் கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்குபெறவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடர் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜுன் 29ம் தேதி வரையில் நடைபெறவுள்ளன. மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள மற்ற நான்கு அணிகளும் ஒருமுறை விளையாடும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
அதில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று குழுவில் உள்ள ஏதேனும் மூன்று அணிகளுடன் விளையாடும். அதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன் முடிவில் ஜுன் 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்துடன் விளையாடுகிறது, அதன் பிறகு ஜூன் 9 ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த பெரிய போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலை கோடிகளில் உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் உட்பட 2024 டி20 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடிக்கு விற்கப்படுகிறது.