சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.6 ஆயிரத்து 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.6 ஆயிரத்து 644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 50 காசுகள் உயர்ந்து, ரூ.78.50-க்கும், ஒரு கிலோ ரூ.78 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், நகை வாங்க இருப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.