மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 13வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக பெத் முனி 12 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 51 பந்துகளில் 85 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் லாரா வோல்வார்ட் 13 பௌண்டரீஸ் என மொத்தமாக 45 பந்துகளில் 76 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் முதல் விக்கெட் 13வது ஓவரில் குஜராத் 140 ரன்களில் இருக்கும் போது தான் விழுந்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சோஃபி மோலினக்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.
இதில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மேகனா 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் 30 ரன்களும், ஜார்ஜியா 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கார்ட்னர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். தனுஜா, எம்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனால் குஜராத் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சின்ஹா போட்டியில் ஆட்டநாயகி விருது 12 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 51 பந்துகளில் 85 ரன்களை அடித்த குஜராத் அணியில் கேப்டன் பெத் முனிக்கு வழங்கப்பட்டது.