இந்தியாவும், ஜப்பானும் செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோவில் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்து பேசினார். பின்னர் டோக்கியோவில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) ஏற்பாடு செய்த ரைசினா வட்டமேசை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, உலகளாவிய தெற்கின் குரலாக, இந்தியா தனது பொறுப்பை உணர்ந்துள்ளது, அதன் வளர்ச்சி முயற்சிகள் இன்று பல்வேறு கண்டங்களில் 78 நாடுகளில் பரவியுள்ளது.
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி அமைப்பினர் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய அவர், கடல்சார் பாதுகாப்பு கவலைக்குரிய வகையில் மாறியுள்ளதாக தெரிவித்தார். இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்