12 வயது சிறுவன் சிறுத்தையை அறையில் அடைத்து வைத்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுத்தையை மிக நெருக்கமாக பார்த்த பின்பும், அந்த சிறுவன் ஒரு கீறல் இல்லாமல் தப்பித்தது மட்டுமல்லாமல், காட்டு விலங்கையும் சிக்க வைத்தான் என்பது அவனது மனவலிமையை காட்டுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.
திருமண மண்டபத்தின் பாதுகாவலரின் மகனான அஹிரே, அவர் தங்கியிருந்த அறைக்குள் சிறுத்தை நுழைவதைக் கண்டதும், சார்ஜருடன் இணைக்கப்பட்டிருந்த தனது மொபைல் போனில் மூழ்கியிருப்பதைக் காட்சிகள் காட்டுகிறது.
ஆனால், அலுவலகத்துக்குள் சென்ற சிறுவனை காட்டு விலங்கு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, 12 வயது சிறுவன் பீதி அடையாமல் இருக்கையை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்து கதவை மூடிக் கொண்டான்.
உடனே அஹிரே தனது தந்தையிடம் சிறுத்தை பற்றி கூறினார்.
“சிறுத்தை மிகவும் நெருக்கமாக இருந்தது. சிறுத்தைக்கும் எனக்கும் இடையில் எந்த இடமும் இல்லை, ”என்று 12 வயதான அந்த சிறுவன் இந்த நிகழ்வு குறித்து செய்தியாளரிடம் தெரிவித்தான்.
“அது எனக்கு முன்னால் அலுவலகத்தின் உள் அறைக்குள் நுழைந்தது. நான் பயந்தேன், ஆனால் நான் அமைதியாக பெஞ்சில் இருந்து இறங்கி அலுவலகத்தை விட்டு வெளியேறி, கதவை மூடினேன் எனச் செய்தியாளரிடம் சிறுவன் தெரிவித்தான்.
இச்சம்பவம் காலை 7:00 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருமண மண்டபத்தின் உரிமையாளர் அனில் பவார், வனத்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் வனத்துறையினர் சிறுதைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் சிறுத்தையை புனேவில் உள்ள ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.