அண்மையில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம். இந்த திரைப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகி உலக சாதனை படைத்தது.
இயக்குநர் சிதம்பரத்தின் கைவண்ணத்தில் உருவான இந்த திரைப்படம் 11 நண்பர்களைச் சுற்றி நடக்கும் சர்வைவல் த்ரில்லர் படமாகும்.
கொடைக்கானலில் உள்ள குணா குகைகளில் கடந்த 2006 -ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
குணா படத்தில் , இசையமைப்பாளர் இசை அமைத்த கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இளசுகள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளது. இதனால், இந்த படத்தில் வரும் குணா குகையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து குணா குகைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால், கொடைக்கானலில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதி வருகின்றனர்.
அந்த வகையில், கொடைக்கானல் குணா குகைக்கு, கடந்த 5 நாட்களில் மட்டும், 20,000 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இந்த தகவலை வனத்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
மற்ற சுற்றுலா தலங்களுக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளைவிட குணா குகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.