மக்களவை தேர்தலுக்கு முன்பாக திரிபுராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திப்ரா மோதா கட்சி (டிஎம்பி) இணைகிறது.
திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பாஜக – திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முக்கிய எதிர்க்கட்சியாக திப்ரா மோத்தா உள்ளது. சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 60 எம்.எல்.ஏ.,க்களில் 13 பேர் திப்ரா மோத்தாவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் பழங்குடியின மக்கள் பிரச்சினை தீர்ப்பது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த மாதம் டெல்லியில் கையெழுத்தானது.திரிபுரா அரசு, மத்திய அரசு மற்றும் எதிர்கட்சியான திப்ரா மோத்தா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதனையடுத்து மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஆட்சியில் பங்கேற்க திப்ரா மோத்தா கட்சி முடிவு செய்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனிமேஷ் டெபர்மா , பிரிஷாகேது டெபர்மா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.