விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் குறித்த முறையான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இப்போது முதலே, அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. வாக்காளர்களும் தேர்தலுக்குத் தயாராகி வருகிறனர்.
பொது மக்கள் வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உளள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், வேட்பாளர்களின் அத்துமீறல்களைப் பொதுமக்கள் சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான வாக்குப்பதிவு மின் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.