திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 5-வது ஆடியோவில் 2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா – ஜாபர் சேட் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டார்.
தமிழகத்தில், திமுக மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரங்களோடு வெளியிட்டு வருகிறார். இதற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், இதன் ஒருபகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக ஊழல் பட்டியலை ஒன்வென்றாக ஆதரத்துடன் வெளியிட்டு வருகிறார்.
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், திமுக அமைச்சர் துரைமுருகன், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்று பலரையும் திகைப்படைய வைத்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார்.
பின்னர், திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றில், ஆடியோ வடிவில் பதிவை வெளியிட்டார். அதில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் இடையே தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ளது.
அடுத்ததாக, திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 2-வது ஆடியோ பதிவையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், 2ஜி விசாரணை மற்றும் சிபிஐ ரெய்டு உள்ளிட்ட அதிர்ச்சி தகவல் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 5-வது ஆடியோவில் 2ஜி வழக்கு குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா – உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Fifth tape: Conversation between DMK MP & former Min. Thiru A Raja (the prime accused in the 2G case) & MS Jaffar Sait, a former chief of TN State Intelligence. #DMKFiles3
A stage-managed CBI raid where the accused of the Scam gets advance information of the raid. The worst part… pic.twitter.com/c0Y93k9jBd
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 7, 2024
அந்த ஆடியோவில், திமுக எம்பி ஆ.ராசாவும், உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டும் பேசுவது பதிவாகியுள்ளது. அதில், பெரம்பலூரில் உள்ள எனது நண்பர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 10 அல்லது 12 இடங்களில் சோதனை இடங்களில் சோதனை நடைபெறும் போல் தெரிகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்களை அலர்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே முயற்சி செய்து வருகிறேன் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
இதுவரை திமுகவின் முறைகேடுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருவதால், திமுக தலைவர்களும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.