250 பாலஸ்தீன தீவிரவாதிகள் கைது: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!
Oct 28, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

250 பாலஸ்தீன தீவிரவாதிகள் கைது: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 06:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கான் யூனிஸ் நகரில் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கைது செய்த இஸ்ரேல்  இராணுவம்,  துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

காஸாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி வருகிறது.  அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தும், கொன்றும் வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் இராணுவம் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கான் யூனிஸ் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது.

கான் யூனிஸின் ஹமாத் டவர்ஸ் பகுதியில், ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இராணுவம் இறங்கி உள்ளது. அப்பகுதியில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையை இஸ்ரேல் இராணுவம் சோதனையிட்டது.

அங்கு மறைந்து இருந்த ஒரு ஹமாஸ் ஸ்னைப்பர் செல் கமாண்டர் மற்றும் இரண்டு ஹமாஸ் படை தளபதிகள் உட்பட பலர் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களை இஸ்ரேல் இராணுவம் கைது செய்தது.

கூடுதலாக, கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. மேலும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத்துடன் தொடர்புடைய மற்ற தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஹமாத் டவர்ஸ் என்பது கடந்த 2012-ஆம் ஆண்டு காஸா மோதலைத் தொடர்ந்து கத்தாரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. இது 40 கோபுரங்களைக் கொண்ட குடியிருப்புப் பகுதியாகும். 2016-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆயுத உற்பத்தி நிலையம், சுரங்கப்பாதைகள் உள்ளன.  இது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் தனிப்பட்ட கோட்டையாகவும் கருதப்படுகிறது.

Tags: IsraelgazaIsraeli forcesKhan YunisHamad Towers
Share
Tweet
SendShare
Previous Post

வருமான வரி தாக்கல் : புதிய விதிகள் குறித்த முழு விவரம்!

Next Post

திமுக ஃபைல்ஸ் பாகம் 5-வது ஆடியோ ரிலீஸ்! – கெத்து காட்டிய அண்ணாமலை

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies