கேரளாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் பத்மஜா வேணுகோபால் பாஜக தலைமை அலுவலகத்தில் இணைந்தார்.
மறைந்த காங்கிரஸ் பிரமுகரும், கேரள முன்னாள் முதல்வருமான கே. கருணாகரனின் மகளான பத்மஜா வேணுகோபால், இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், மற்றும் பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பத்மஜா வேணுகோபால் யார்?
வேணுகோபால், 64, மறைந்த கேரள முன்னாள் முதல்வர் கே கருணாகரனின் மகள். வேணுகோபால் தற்போது கேரள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். திருச்சூர் தொகுதியில் இருந்து கடந்த இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்ததால், அவர் தொடர்ச்சியான தேர்தல் பின்னடைவைச் சந்தித்தார். 2004 லோக்சபா தேர்தலிலும் முகுந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி அண்மையில் பாஜகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த பத்மஜா வேணுகோபால் பாஜகவில் இணைந்துள்ளது, காங்கிரஸ் தோல்வியை உறுதி செய்துள்ளது.