சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்… pic.twitter.com/CVJoxBld5E
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 8, 2024
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள பெரும்பாலான நலத்திட்டங்கள், மகளிருக்கான மரியாதையையும், அங்கீகாரத்தையும் முன்வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளன என்பதும், பெண்களுக்கான சமத்துவமும், சம உரிமையும் ஒவ்வொரு துறையிலும் உறுதி செய்யப்படுவதன் முதல்படியாக, மக்கள் பிரதிநிதித்துவத்தில் 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் நமது பிரதமர் அவர்கள்தான் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.